search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குசால் பெரேரா"

    டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஸ்டெயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 235 ரன்னில் சுருண்டது.

    விக்கெட் கீப்பர் டி காக் அதிகபட்சமாக 80 ரன்கள் சேர்த்தார். பவுமா 47 ரன்னும், டு பிளிசிஸ் 35 ரன்களும், மகாராஜ் 29 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தது, கருணாரத்னே 28 ரன்களுடனும், பெர்னாண்டோ 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருணாரத்னே மேலும் இரண்டு ரன்கள் அடித்து 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேபோல் பெர்னாண்டோவும் மேலும் 2 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் சரிய ஆரம்பித்தது. குசால் பேரேரா (51) மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். டி சில்வா 23 ரன்களும், அறிமுக வீரர் அம்பல்டெனியா 24 ரன்களும் அடிக்க இலங்கை 191 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 44 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த ரன்தான் இந்த போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருக்க வாய்ப்புள்ளது. 44 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    ×